தொகுப்பாளர் விடுத்த சவாலை ஏற்று இவாங்கா டிரம்ப் தொலைக்காட்சி நிலையத்திற்கே வந்து கொரோனா தடுப்பு மருந்தை ஏற்பதாக உறுதி

0 1854
தொகுப்பாளர் விடுத்த சவாலை ஏற்று இவாங்கா டிரம்ப் தொலைக்காட்சி நிலையத்திற்கே வந்து கொரோனா தடுப்பு மருந்தை ஏற்பதாக உறுதி

தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் விடுத்த சவாலை ஏற்றுக் கொண்ட இவாங்கா டிரம்ப் தொலைக்காட்சி நிலையத்திற்கே வந்து கோவிட் தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

அதிபர் டிரம்ப்பின் மகளான இவாங்கா, கொரோனா தடுப்பு மருந்து குறித்து எதிர்க்கட்சியினர் எழுப்பி வரும் சந்தேகங்களுக்கும் புகார்களுக்கும் பதிலடி கொடுக்கும் விதமாக இந்த சவாலை ஏற்றுக் கொண்டார்.

போலியோ போன்ற தொற்று நோய்களுக்கு உலகம் தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க நீண்ட காலமானதையும் இவாங்கா சுட்டிக் காட்டினார்.

நிகழ்ச்சி நேரலையில் இவாங்காவை பேட்டி கண்ட தொகுப்பாளர் இவாங்கா தடுப்பு மருந்தை ஏற்றால் தானும் ஏற்பதாக கூறிய நிலையில் அந்த சவாலை இவாங்கா ஏற்றுக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments