தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அமையும் 7 புதிய அரசு கலை அறிவியல் கல்லூரிகள்

0 4493
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் புதிதாக 7 அரசு கலை அறிவியல் கல்லூரிகளை துவங்க நடவடிக்கை எடுக்குமாறு கல்லூரி கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் புதிதாக 7 அரசு கலை அறிவியல் கல்லூரிகளை துவங்க நடவடிக்கை எடுக்குமாறு கல்லூரி கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

கோவை, கரூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், விருதுநகர், நாகப்பட்டினம், அரியலூர் ஆகிய 7 மாவட்டங்களில் புதிய கல்லூரிகள் துவங்கப்படுகின்றன.

இந்த கல்லூரிகளுக்கு தேவையான அரசு கட்டிடத்தை தேர்வு செய்து நடப்பு கல்வியாண்டு முதல் மாணவர் சேர்க்கையை நடத்தவும், அவ்வாறு அரசு கட்டடங்கள் இல்லையெனில் பொருத்தமான தனியார் கட்டிடங்களை தெரிவு செய்து அந்த கட்டிடத்தில் கல்லூரி இயங்கவும், தேவையான நடவடிக்கை எடுக்க மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments