கேரள அமைச்சரிடம் விசாரணை... பதவி விலகக் கோரி போர்க்கொடி

0 1068

தங்கக் கடத்தல் விவகாரத்தில் கேரள அமைச்சரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில், அவரை பதவி விலகக் கோரி நடந்த போராட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் தடியடி நடத்தப்பட்டது.

கேரள தங்க கடத்தல் வழக்கு தொடர்பாக மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் K.T. ஜலீலிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

கொச்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்ட அவரிடம், திருவனந்தபுரம் யுஏஇ துணை தூதரகத்துடன் உள்ள தொடர்பு, தங்க கடத்தல் வழக்கு குற்றவாளிகளுடன் உள்ள தொடர்பு உள்ளிட்டவை குறித்து  விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

வழக்கில் முக்கிய குற்றவாளியான சொப்னா சுரேஷுடன் அவர் பலமுறை செல்போனில் பேசியது குறித்தும் பல கேள்விகள் எழுப்பப்பட்டதாக சொல்லப்படுகிறது.

தங்க கடத்தல் வழக்கில் கேரள முதலமைச்சரின் முன்னாள் முதன்மை செயலர் சிவசங்கரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ள நிலையில், மாநில அமைச்சர் ஒருவரே விசாரணை வளையத்தில் கொண்டுவரப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments