கழுத்தில் பணமாலையுடன் வனிதா விஜயகுமார் குபேர பூஜை!

0 120083

இந்த ஆண்டின் இனிவரும் மாதங்களாவது நன்றாக இருக்க வேண்டுமென்று வனிதா விஜயகுமார் கழுத்தில் பண மாலை அணிந்து குபேர பூஜை செய்துள்ளார்.

நடிகை வனிதா விஜயகுமார் பீட்டர்பாலை என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்தார். பீட்டர்பால் முதன் மனைவியை விவகாரத்து செய்யாமல் வனிதாவை திருமணம் செய்ததால் சர்ச்சை எழுந்தது. பீட்டர்பாலின்  முதல் மனைவி போலீஸ் நிலையத்தில் புகாரும் அளித்தார். பீட்டர்பாலை திருமணம் செய்தது தொடர்பாக நடிகைகள் கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் வனிதாவை விமர்சித்தனர். இதைத் தொடர்ந்து  வனிதா சமூகவலைத்தளங்களில் கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணனுடன் மோதலில் ஈடுபட விவகாரம் போலீஸ் நிலையம் வரை சென்றது.

இதற்கிடையே, வனிதா விஜயகுமாரின் கணவர் பீட்டர் பாலுக்கு நெஞ்சுவலி ஏற்பட  அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். தற்போது, குணமடைந்து வீட்டில் வனிதா விஜயகுமாரின் பராமரிப்பில் பீட்டர்பால் உள்ளார். தான் மருத்துவமனையில் இருந்த போது தாயார் ஸ்தானத்திலிருந்து வனிதா விஜயகுமார் தன்னை பார்த்துக் கொண்டதாகவும் பீட்டர் பால் மனைவியை புகழ்ந்திருந்தார்.

இந்த நிலையில், தன் வீட்டில் வனிதா விஜயகுமார் குபேர பூஜை நடத்தியுள்ளார். 2020 ஆம் ஆண்டு அனைவருக்குமே பிரச்னை தரக் கூடிய ஆண்டாக அமைந்து விட்டது. இந்த ஆண்டின் இனிவரும் மாதங்களாவது அனைவருக்கும் நல்லவிதமாக அமைய வேண்டுமென இந்த பூஜை நடத்தியதாக சமூகவலைத்தளங்களில் வனிதா கூறியுள்ளார். தன் கழுத்தில் பண மாலை அணிந்து பூஜையில் ஈடுபட்ட புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments