நாடாளுமன்ற கூட்டத் தொடரில் 23 புதிய மசோதாக்கள்

0 2225

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் 23 புதிய மசோதாக்களை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

நாடாளுமன்ற மழைக்காலத் கூட்டத் தொடர் வரும் 14ம் தேதி முதல் அக்டோபர் 1ம் தேதி வரை 18 நாட்கள் நடக்க உள்ளது. இந்தக் கூட்டத் தொடரில் 11 மசோதாக்கள், ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டங்களுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்படுகின்றன.

கொரோனா ஒழிப்பில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளர்கள் மீதான தாக்குதலுக்கு தண்டனை விதிக்கும் மசோதா, எம்பிக்களின் ஊதியத்தை ஓராண்டிற்கு 30 விழுக்காடு குறைப்பதற்கான மசோதா, விவசாயிகள் தங்களது விளைபொருட்களை விரும்பிய இடத்தில் விருப்பமான விலைக்கு விற்க வகை செய்யும் மசோதா ஆகியன இவற்றில் முக்கியமானவைகளாக உள்ளன.

நடப்பு நிதியாண்டிற்கான துணை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடத்தப்பட்டு, வாக்கெடுப்பிற்கு விடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை தவிர மேலும் 12 மசோதாக்களும் அறிமுகம் செய்யப்பட உள்ளன. 

முன்னதாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாகயர் ஓம் பிர்லா, கொரோனா பரவலை தடுக்க எம்.பி.க்கள் வருகையை மின்னணு முறையில் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். நாடாளுமன்றம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்படும் என்றும், கூட்டத்தொடருக்கு முன்பாக, எம்.பி.க்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments