8 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்..!
எட்டு ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நில நிர்வாக கூடுதல் ஆணையராக இருந்து விடுப்பில் சென்று திரும்பிய மகேஸ்வரி, மாநில மனித உரிமைகள் ஆணைய செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உயர் கல்வித் துறை கூடுதல் செயலராக இருந்த லில்லி, நில சீர்திருத்த துறை இயக்குனர் ஆகவும், கோ ஆப்டெக்ஸ் இயக்குநராக இருந்த வெங்கடேஷ் பொதுத் துறை சிறப்பு செயலராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் செயல் அலுவலராக இருந்த அம்ரித், பொதுத் துறை துணைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
Comments