"லே" விமான நிலையத்தில் புதிய முனையம்: ஏஏஐ அறிவிப்பு
லே விமான நிலையத்தில் ஆண்டிற்கு 20 லட்சம் பயணிகளைக் கையாளும் விதமாக புதிய முனையம் கட்டப்படும் என இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய விமான நிலைய ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தற்போதுள்ள விமான நிலையத்தின் முனையம் மூலம் ஆண்டிற்கு 9 லட்சம் பயணிகளைக் கையாள முடிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
480 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் புதிய முனைய கட்டிட பணிகள், டிசம்பர் 2022 க்குள் முடிவடையும் என்றும் கூறப்பட்டுள்ளது. லேவில் உள்ள குஷோக் பாகுலா ரின்போசே விமான நிலையம் கடல் மட்டத்திலிருந்து 3,256 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments