கொரோனா நோயாளிகளுக்கான ஆம்புலன்ஸ் கட்டணத்தை நியாயமாக நிர்ணயிக்க மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்

0 1115

கொரோனா நோயாளிகளுக்கான ஆம்புலன்ஸ் கட்டணத்தை நியாயமான விகிதத்தில் நிர்ணயிக்குமாறு மாநில அரசுகளை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

கொரோனா காலகட்டத்தில் நாட்டின் சுகாதார வசதிகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக தாக்கலான மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஒவ்வொரு மாவட்டத்திலும், கொரோனா நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்வதற்கு போதிய எண்ணிக்கையிலான ஆம்புலன்சுகளை மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

பல மாநிலங்களில் குறைவான தூரத்திற்கு ஆயிரக்கணக்கில் ஆம்புலன்ஸ் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ள நிலையில் இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. கொரோனா தொற்றை கையாளுவதில் மத்திய அரசு பிறப்பிக்கும் நடைமுறைகளை மாநில அரசுகள் தவறாது பின்பற்ற வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments