தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது - முதலமைச்சர்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதாக கூறியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வைரஸ் தொற்று உறுதி ஆனவர்களில் 89 சதவீதம் பேர், குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து, மாவட்டந்தோறும் ஆய்வு செய்து வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இரு மாவட்ட ஆட்சியர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாத சூழலிலும், பாதிப்பை படிப்படியாக குறைத்து வருவதாக தெரிவித்தார்.
மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் தான் கொரோனா கட்டுக்குள் வந்து, இயல்பு நிலைக்கு திரும்ப முடி யும் என கூறிய அவர், வைரஸ் தொற்றை தடுக்க தவறி விட்டதாக எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் கருதி குற்றச்சாட்டுக்களை சுமத்துவதாக குறிப்பிட்டார்.
கொரோனா தடுப்புப் பணியில் மருத்துவர் களும், செவிலியர்களும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருவதாக முதலமைச்சர் எடப் பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்தார்.
முன்னதாக, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில்120 கோடி ரூபாய் மதிப்பில் 43 பணி களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். காஞ்சிபுரத்தை அடுத்த கீழ்க் கதிர் ப்பூரில் கட்டப்பட்டுள்ள 2 ஆயிரத்து112 அடுக்கு மாடிக் குடியிருப்புகள் உட்பட 291கோடி ரூபாய் மதிப்பிலான 128 புதிய கட்டங்களையும் அவர் திறந்து வைத்தார்.
சுமார் 22 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 742 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.
Comments