செப்டம்பர் 11 தாக்குதல் - 19 ஆண்டுகால அமெரிக்காவின் போரில் அகதிகளான மூன்றரை கோடி மக்கள்!

0 4027
செப்டம்பர் 11 தாக்குதல்

2001 - ம் ஆண்டிலிருந்து அமெரிக்கா நடத்திய பல்வேறு போர்கள் மூலம், உலகம் முழுவதும் மூன்றுகோடியே எழுபது லட்சம் மக்கள் தம் வாழ்விடங்களை இழந்து அகதிகளாகியுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

2001, செப்டம்பர் 11 - ம் தேதியை உலக மக்கள் யாராலும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. ஏனெனில், அன்றுதான் அமெரிக்காவில் இயங்கிய உலக வர்த்தக மையக் கட்டடம் பயங்கரவாதிகளால் விமானம் மூலம் மோதி தரைமட்டமாக்கப்பட்டது. இந்தக் கொடூர தாக்குதலில் விமானத்திலிருந்த 246 பொதுமக்களும், டுவின் டவரில் பணியாற்றிய 2973 பேரும் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். 2001 - ம் ஆண்டு நடைபெற்ற இந்தத் தாக்குதல், கடந்த 19 ஆண்டுகளில் உலகம் முழுவதும் பல்வேறு போர்கள் ஏற்படக் காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் போரால், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சிர்யா, ஏமன் உள்ளிட்ட நாடுகளின் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர்.

இந்த சூழலில், ப்ரௌன் பல்கலைக்கழகம், அமெரிக்கா பயங்கரவாதிகளுக்கு எதிராக நடைபெற்ற போர்குறித்து ஆய்வு செய்தது. ’போர்த்திட்ட செலவுகள் எனும் பெயரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 2001 க்குப் பிறகு அமெரிக்கா ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சிரியா, ஓமன் நாடுகளில் மேற்கொண்ட போர்கள் மூலம் இதுவரை 37 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தம் வாழ்விடங்களை இழந்து அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

இது குறித்து ஆய்வு நடத்திய ப்ரௌன் பல்கலைக்கழகம், “இரண்டாம் உலகப்போர் உலகப்போரைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் 20 - நூற்றாண்டில் அமெரிக்கப் போரால் தான் அதிக மக்கள் அகதிகளாகி உள்ளனர். அகதிகளான மக்களின் எண்ணிக்கை கனடா நாட்டு மக்கள் தொகையை விடவும் அதிகம். இந்தப் போர்களால் ஆப்கானிஸ்தான், ஈராக், பாகிஸ்தான், ஏமன், சோமாலியா, பிலிப்பைன்ஸ், லிபியா, சிரியா ஆகிய நாட்டு மக்கள் தான் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று கூறியுள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments