அமேசான் காட்டுத் தீக்கு ஐரோப்பாவே முக்கிய காரணம் என குற்றச்சாட்டு
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் உள்ள ஐரோப்பிய ஆணையத்தின் முகப்பில், அமேசானில் மரங்கள் தீப்பிடித்து எரிவதை பிரதிபலிக்கும் பிரம்மாண்ட பேனரை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொங்கவிட்டனர்.
கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் பிரேசிலில் உள்ள அமேசான் காடுகளில் கடந்த 7 நாட்களில் மட்டும் காட்டுத் தீக்களின் எண்ணிக்கை 2 மடங்கு அதிகரித்துள்ளது என்று அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், அங்குள்ள தொழிற்சாலைகளின் முக்கிய நுகர்வோர்களான ஐரோப்பிய நாடுகளே, அமேசான் காட்டுத் தீகளுக்கு முக்கிய காரணம் என்று கூறி ஐரோப்பிய ஆணையத்தின் முன்பு ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Comments