”கேரளாவில் இப்போதைக்கு இடைத்தேர்தல் வேண்டாம்" அனைத்துக் கட்சிகள் வலியுறுத்தல்
கேரளாவில், தற்போதைய கொரோனா சூழலில், இடைத்தேர்தலை நடத்த வேண்டாம் என அனைத்து கட்சிகளும், ஒரே குரலாக, தலைமை தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ளன.
திருவனந்தபுரத்தில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில், அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. அதில், காலியாக உள்ள குட்டநாடு(Kuttanad), சவாரா(Chavara) ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு, நவம்பர் மாதத்தில் நடைபெறலாம் எனக்கூறப்படும் இடைத்தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது.
அப்போது, அனைத்துக் கட்சிகளும், கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ள சூழலில், இடைத்தேர்தல் தற்போதைய நிலையில், சாத்தியமற்றது ஒருமித்த குரலில் கூறின. இக்கருத்தை, அப்படியே, தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடிதமாக எழுதி வலியுறுத்தப்படும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்தார். மேலும், உள்ளாட்சி தேர்தலையும் ஒத்திவைக்க, மாநில தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
Comments