பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம் தனிநபரின் முழு உரிமை அல்ல.! மும்பை உயர்நீதிமன்றம்
பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் ஆகியவை, தனிநபர் ஒருவருக்கே உரிய, முழுமையான உரிமை ஆகாது என மும்பை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
மராட்டிய முதலமைச்சர் உத்தவ் தாக்ரே, அவரது மகனும் அமைச்சருமான ஆதித்யா தாக்ரே ஆகியோருக்கு எதிராக அவதூறு பரப்பிய புகாரில், சுனைனா ஹோலே (Sunaina Holey) என்ற பெண் ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில், முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், அரசியலமைப்புச் சட்டத்தின் 19ஆவது அட்டவணை வழங்கும், பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ளது.
அதில், பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் என்ற பெயரில், யார் மீதும், எதை வேண்டுமானாலும் பேசுவதற்கு, எவருக்கும் முழுமையான உரிமை அளிக்கப்படவில்லை என்றும், இதை எப்போதும் மனதில் இருத்த வேண்டும் என்றும் மும்பை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
Comments