மெக்ஸிகோவின் முக்கிய சுற்றுலாத்தலங்கள் மீண்டும் திறப்பு
மெக்ஸிகோவின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான தியோதிஹுகானின் (Teotihuacan) பிரமாண்டமான கோயில்கள் மற்றும் பிரமிடுகள் 5 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
மெக்சிகோ நகரத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள தியோதிஹுகான் நகரம், பண்டைய காலத்தில் கத்திகள் மற்றும் ஆயுதங்கள் தயாரிப்புக்கு புகழ்பெற்றது.
இங்கு தொல்பொருள் மண்டலம் மற்றும் அவென்யூ ஆஃப் தி டெட் சுற்றுப்பயணத்துக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெப்பநிலை பரிசோதனை, முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டு நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் பார்வையாளர்கள் வீதம் அனுமதி வழங்கப்படுகிறது.
Comments