ஜோர்டானில் ராணுவ சேமிப்புக் கிடங்கில் மின்கசிவால் வெடி விபத்து எனத் தகவல்
ஜோர்டானில் ராணுவ சேமிப்புக் கிடங்குகளில் மின்கசிவு காரணமாக அடுத்தடுத்து வெடி விபத்து நிகழ்ந்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
தலைநகர் அம்மானுக்கு அருகே உள்ள சர்கா நகரில் ராணுவ தளங்கள் அதிகளவில் செயல்பட்டு வந்த நிலையில், அவற்றின் வெடி மருந்து சேமிப்பு கிடங்குகளில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், இதில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் அரசு செய்தித் தொடர்பாளர் அம்ஜத் அடிலா தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து சர்காவுக்கு அதிகாரிகள் சீல் வைத்ததுடன் போக்குவரத்துக்கு தடை விதித்தனர்.
தங்கள் பகுதியில் இருந்து பெரிய தீப்பிழம்புகளை கண்டதாகவும் அதிர்வில் வீடுகள் சிலவற்றின் ஜன்னல்கள் சேதமடைந்ததாகவும் சுற்றுவட்டார குடியிருப்புவாசிகள் தெரிவித்துள்ளனர்.
Comments