மருத்துவ பரிசோதனைக்கு ஒத்துழைக்க மறுத்து நடிகை சஞ்சனா போலீசாருடன் வாக்குவாதம்
கர்நாடக மாநிலம் பெங்களூரில் போதை பொருள் புகாரில் கைதான கன்னட நடிகை சஞ்சனா, மருத்துவ பரிசோதனைக்கு ஒத்துழைக்க மறுத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
போதை பொருள் விவகாரத்தில் கைதான நடிகைகள் ராகிணி, சஞ்சனா ஆகியோரை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
பெங்களூர் மடிவாளா மகளிர் கைதிகள் காப்பகத்தில் அடைக்கப்பட்டுள்ள இருவரையும், மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவதற்காக பெங்களூர் கே.சி. அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, நடிகை சஞ்சனா மருத்துவ பரிசோதனைக்கு ஒத்துழைக்க மறுத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவை காட்டிய பிறகு அமைதியாக பரிசோதனை செய்து கொண்டார். இந்த பரிசோதனை முடிவுகள் வர ஏழு நாட்கள் ஆகும் என கூறப்பட்டுள்ளது.
Comments