கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் - பிரதமர் மோடி

0 2972
புதிய எண்ணங்களையும், புதிய நம்பிக்கைகளையும் நிறைவேற்றுவதற்கான ஒரு வழியே தேசியக் கல்விக் கொள்கை என்றும், அதை நாடு முழுவதும் திறம்பட நடைமுறைப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடிதெரிவித்துள்ளார்.

21ஆம் நூற்றாண்டில் பள்ளிக்கல்வி என்னும் பெயரில் நடைபெற்ற மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி காணொலியில் உரையாற்றினார். புதிய இந்தியாவின் புதிய எண்ணங்களையும், புதிய நம்பிக்கைகளையும் நிறைவேற்றுவதற்கான ஒரு வழியே தேசியக் கல்விக் கொள்கை என்றும், இதை நாடு முழுவதும் திறம்பட நடைமுறைப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

கல்வி உள்ளிட்ட பல்துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் கடந்த ஐந்தாண்டுகளில் இடைவிடாத கடின உழைப்பால் உருவாக்கியதே தேசியக் கல்விக் கொள்கை என்றும் அவர் குறிப்பிட்டார். அந்தப் பணி இன்னும் முடியவில்லை என்றும், இது ஒரு தொடக்கம் தான் என்றும், கல்விக் கொள்கையைத் திறம்பட நடைமுறைப்படுத்த இன்னும் நெடுந்தொலைவு பயணிக்க வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குழந்தைகளின் முதல் வெளியுலக அனுபவம் மழலையர் பள்ளி என்றும், விளையாட்டு, செயல்பாடு, கண்டுபிடிப்பு ஆகியவற்றுடன் இணைந்து கற்பித்தலைச் செய்யும் நல்ல ஆசிரியர்கள் மழலையர் பள்ளிகளில் இருந்தே நமக்குத் தேவைப்படுவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments