நடிகர் சுசாந்த் மரண வழக்கில், நடிகை ரியாவுக்கு ஜாமீன் மறுப்பு

0 3429
நடிகர் சுசாந்த் மரண வழக்கில், நடிகை ரியாவுக்கு ஜாமீன் மறுப்பு

சுசாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான வழக்கில் இந்தி நடிகை ரியா சக்ரவர்த்தி,  சகோதரர் ஷோவிக் உள்ளிட்ட 6 பேர் ஜாமீன்கோரி தாக்கல் செய்த மனுக்களை மும்பை சிறப்பு நீதிமன்றம்  தள்ளுபடி செய்தது.

சுசாந்த் மரணம் குறித்த விசாரணையில் போதைப் பொருள் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்ததால் அதுகுறித்து போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் அடிப்படையில் நடிகை ரியா சக்ரவர்த்தி, சகோதரர் ஷோவிக் மற்றும் அப்துல் பசித், ஜயித் விலடரா, தீபேஸ் சாவந்த், சாமுவேல் மிராண்டா ஆகியோர்  கைது செய்யப்பட்டனர். 

அவர்கள் 6 பேரும் ஜாமீன்கோரி தாக்கல் செய்த மனுக்கள், மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன. அப்போது அவர்களின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments