சாப்பாடு சரியில்லை... கொசுக்கடியில் தவிப்பு! சிறையில் கன்னட நடிகைகளின் இரவு

0 6599

போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை சஞ்சனா கல்ராணி மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள மறுத்து போலீஸாரிடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

போதை பொருள் புழக்கம் விவகாரத்தில் கன்னட நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் கைது செய்யப்பட்டு பெங்களுரு மடிவாளாவில் உள்ள மகளிர் கைதிகள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். போதைப்பொருள் கிடைத்தது, பயன்படுத்திய குறித்து போலீஸார் அவர்களிடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறையில் அடைபட்டு கிடக்கும் இரு நடிகைகளும்' இப்படி சிக்கிக் கொண்டோமே ' என்று கடும் சோகத்தில் இருப்பதாக தகவல்கள் சொல்கின்றன.

சிறையில் நடிகைகளுக்கு வழங்கப்பட்ட உணவு அவர்களுக்கு ஏற்றுக் கொள்ளவில்லை.  ஏ.சி வசதி இல்லாத அறையில் தூங்க முடியாமல் அவதிப்பட்டுள்ளனர். கொசுக்கடியால் தூக்கமே இல்லை என்று போலீஸாரிடத்திலும் அந்த நடிகைகள் புலம்பியுள்ளனர்.

ராகினி , சஞ்சனா ஆகிய இருவரிடமும்  அடுத்த கட்ட விசாரணை நடத்த மத்திய குற்றப் பிரிவுபோலீஸார் முடிவுசெய்துள்ளனர் . இதற்கான , கேள்விகளை சி.சி.பி தயார் செய்துள்ளது . மேலும் போட்டோக்கள் , வீடியோக்களை காண்பித்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். இதற்கிடையே,  இன்று நடிகைகள் ராகினி சஞ்சனா ஆகிய இருவரையும்  பெங்களூர் கே.சி. அரசு மருத்துவமனையில் ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீசார் அழைத்துச் சென்றனர்.

ஆனால், நடிகை சஞ்சனா மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள மாட்டேன் என போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் ,போலீசார் பரிசோதனை செய்வதற்கான நீதிமன்ற உத்தரவை சஞ்சனாவிடம் காண்பித்தனர் அதன் பிறகு, அமைதியான சஞ்சனா பரிசோதனை மேற்கொள்ள ஒத்துழைத்தார். பரிசோதனை முடிவு வர ஏழு நாட்கள் ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments