கங்கனா ரணாவத்துக்கு 'Z plus' பாதுகாப்பு அளிக்க வேண்டும் - உ.பி., பாஜக எம்எல்ஏ

0 1381

கங்கனா ரணாவத்துக்கு அளிக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பை இசட் பிளஸ் (Z plus)ஆக உயர்த்தக்கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, உத்தர பிரதேச பாஜக எம்எல்ஏ நந்த் கிசோர் குர்ஜார் கடிதம் எழுதியுள்ளார்.

இமாசல பிரதேசத்தை சேர்ந்த கங்கனா, மும்பையை மினி பாகிஸ்தான் எனத் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து மகாராஷ்டிராவை ஆளும் சிவசேனா கட்சியினரால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக அவர் கூறவே, இமாசல பிரதேச அரசின் பரிந்துரையை ஏற்று ஒய்.பிளஸ் (Y-plus) பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியது.

இந்நிலையில், லோனி தொகுதி எம்எல்ஏ குர்ஜார், கங்கனாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டுமெனவும், மும்பையிலுள்ள கங்கனாவின் அலுவலக கட்டிடம் சட்டவிரோதமாக இடிப்பதற்காக உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர அரசை கலைக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments