பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்த விராலிமலை வங்கி ஊழியர் 7 மாதத்துக்கு பிறகு கைது!

0 13867

திருச்சியில் பல பெண்களுடன் தொடர்பு வைத்துள்ளதாக கணவர் மீது மனைவி அளித்த புகாரில், விராலிமலை வங்கி அதிகாரி எட்வின் ஜெயக்குமார் நேற்று போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை மஸ்தான் தெருவை சேர்ந்தவர் எட்வின் ஜெயக்குமார்(வயது 36). இவருக்கும், தஞ்சையை அடுத்த கள்ளப்பெரம்பூர் பகுதியை சேர்ந்த தாட்சர் என்பவருக்கும் 2019- ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் திருமணம் நடந்தது. எட்வின் ஜெயக்குமார் விராலிமலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கேஷியராக பணியாற்றி வந்தார். திருமணத்துக்கு பிறகு எட்வின் மனைவியுடன் நெருங்குவதை தவிர்த்து வந்துள்ளார். இது தொடர்பாக ஏதாவது கேட்டால் ஜெயக்குமாரின் தாய் லில்லி, உறவுக்கார பெண்கள் கேத்ரீன் ஆகியோர் தாட்சரை அடித்துள்ளனர். எப்போது பார்த்தாலும் எட்வின் ஜெயக்குமார் செல்போனிலேயே மூழ்கி கிடந்துள்ளார். அவரிடத்தில் 10- க்கும் மேற்பட்ட செல்போன்களும் இருந்துள்ளன.image

கணவரின் நடவடிக்கையால் சந்தேகமடைந்த தாட்சர் அவரின் செல்போன்களை எடுத்து பார்த்த போது அதில் ஏராளமான பெண்களுடன் ஜெயக்குமார் இருப்பது போன்ற ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளன. 50 - க்கும் மேற்பட்ட பெண்களுடன் ஜெயக்குமார் தொடர்பு வைத்திருந்தது தெரிய வந்தது., ஜெயக்குமார் பணி புரிந்த வங்கியில் சக பெண் ஊழியர் , பெண் வாடிக்கையாளர்களுக்கும் ஜெயக்குமாருடன் தொடர்பு இருந்துள்ளது. வீடியோக்களை பார்த்து அதிர்ச்சியடைந்த தாட்சர், ஜெயக்குமாரின் செல்போனில் உள்ள வீடியோக்களை தன் செல்போனுக்கு மாற்றினார். பிறகு தன் தாய் வீட்டுக்கு சென்று விட்டார். தொடர்ந்து பிப்ரவரி மாதத்தில் கணவரின் தகாத உறவு குறித்து வல்லம் காவல்துறையிடத்தில் தாட்சர் புகாரளித்தார். காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காததால், தஞ்சை டி.ஐ.ஜி லோகநாதனிடத்தில் புகார் செய்தார்.

டி.ஐ.ஜி உத்தரவின் பேரில் வல்லம் அனைத்து மகளிர் போலீசார் முதலில் சாதாரண பிரிவில் வழக்குப்பதிவு செய்தனர். வழக்குப்பதிவு செய்யப்பட்டதால், மதுரை உயர்நீதிமன்றத்தில் எட்வின் ஜெயக்குமார் உள்பட 5 பேரும் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தனர். நீதிமன்றத்தில் முன்ஜாமீனும் வழங்கப்பட்டது. எட்வின் ஜெயக்குமாருக்கு ஜாமீன் கிடைத்தை அறிந்த தாட்சர் இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு ஆவணங்களை இணைத்து மதுரை உயர்நீதிமன்றத்துக்கு மற்றோரு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் எட்வின் ஜெயக்குமார் , லில்லி உள்ளிட்ட 5 பேரின் முன்ஜாமீனை ரத்து செய்து அவர்களை கைது செய்ய உத்தரவிட்டது. பிறகு, 5 பேரின் மீதும் ஜாமீனில் வெளி வர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து எட்வின் உள்பட 5 பேரும் தலைமறைவாகி விட்டனர். எட்வின் ஜெயக்குமார், அவருடன் தொடர்பிலிருந்து வங்கி பெண் ஊழியரும் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். வழக்கும் வல்லம் மகளிர் காவல்நிலையத்திலிருந்து மணப்பாறை மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில், மணப்பாறை பகுதியில் பதுங்கியிருந்த எட்வின் ஜெயக்குமாரை மணப்பாறை மகளிர் போலீஸார் கைது செய்தனர். அவரிடத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments