ஊழல் கறை படிந்த அரசியல்வாதிகள் மீது 4,442 வழக்குகள் நிலுவை - உச்சநீதிமன்றம் வேதனை
கறை படிந்த எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் மீது நான்காயிரத்து 400க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது அதிர்ச்சியளிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த வழக்குகளை விரைவில் விசாரிக்க கூடுதலான சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கவும் உச்சநீதிமன்றம் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.
பொதுநல மனுவை விசாரித்த நீதிபதிகள், தற்போது 12 சிறப்பு நீதிமன்றங்களை மட்டும் நியமனம் செய்திருப்பதை சுட்டிக் காட்டியுள்ளது.
மாவட்ட வாரியாக நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்களை வழங்குமாறும் அனைத்து உயர்நீதிமன்றங்களையும் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
Comments