ஜம்மு-காஷ்மீரில் போர்நிறுத்த ஒப்பந்தங்களை மீறி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்
ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறி இரவில் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஈடுபட்டது.
பூஞ்ச் மாவட்டத்தில் கிரிஷ்ண காடி பிரிவில் இரவு 10 மணியளவில், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஈடுபட்டது.
இதற்கு இந்திய ராணுவமும் துப்பாக்கிச் சூடு நடத்தி தக்க பதிலடி கொடுத்துள்ளது.
எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீன ராணுவத்தினரால் தொடர்ந்து பதற்றம் நீடித்து வரும் சூழலில், பாகிஸ்தான் ராணுவமும் இதுபோன்ற அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறது.
Comments