காலில் துப்பட்டாவுடன் தென்னைமரம் ஏறிய ”அஞ்சான்” நடிகை..! சேலம் தோப்பில் சாகசம்

0 12254
காலில் துப்பட்டாவுடன் தென்னைமரம் ஏறிய ”அஞ்சான்” நடிகை..! சேலம் தோப்பில் சாகசம்

சினிமாவில் தென்னை மரத்தில் ஏறுவதற்கு நாயகர்களே டூப்பையும், ரோப்பையும் நம்பி இருக்கும் நிலையில் நடிகை ஒருவர் நிஜத்தில் துப்பட்டாவை காலில் மாட்டிக் கொண்டு தென்னை மரத்தில் ஏறி அசத்தி உள்ளார்.

அஞ்சான் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை சஞ்சனா சிங்..! இவர் உடற்பயிற்சி செய்வதில் அதிதீவிர ஆர்வம் கொண்டவர். இவரது மேற்கொள்ளும் உடற்பயிற்சிகள் ஒவ்வொன்றும் ஆண்களுக்கு இணையாக இருக்கும்.

தமிழ் சினிமாவில் சிக்ஸ் பேக் உள்ள நடிகைகளில் சஞ்சனாவும் ஒருவர், உடலை வருத்தி பயிற்சி மேற்கொண்டு கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் சஞ்சனா, அண்மையில் நாயகர்களே வியந்து போகும் அளவுக்கு ஒரு சாகசத்தை செய்தார். சேலத்தில் நண்பர்களுடன் ஒரு விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற சஞ்சனா, துப்பட்டாவை காலில் மாட்டிக்கொண்டு அங்கிருந்த தென்னை மரம் ஒன்றில் அனாயசமாக ஏறி அசத்தினார்.

தென்னைமரத்தை கட்டிப்பிடித்துக் கொண்டு சிறு நடுக்கம் கூட இல்லாமல் அவர் ஏறிய விதம், அவர் மரம் ஏறுவதில் முறையான பயிற்சி பெற்றவர் என்பதை சுட்டிக்காட்டியது.

தென்னை மரத்தின் உச்சி வரை சென்று இறங்கிய சஞ்சனா தான் 20 வருடங்களுக்கு முன்பு தென்னை மரத்தில் ஏறிய அனுபவம் இருந்ததாகவும் அந்த நம்பிக்கையில் மேலே ஏறியதாகவும் தெரிவித்தார்.

சினிமாவில் மாஸ் ஹீரோக்களே ரோப், டூப் ஆகியவற்றின் உதவியுடன் ஆக்சன் நாயகர்களாக வலம் வரும் நிலையில், சுடிதாரை வரிந்து கட்டி, துப்பாட்டாவை காலில் சுருட்டி மாட்டி, மரம் ஏறும் நடிகை சஞ்சனா நிஜ சாகச ராணி..! என்கின்றனர் அவரது நண்பர்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments