இந்தியா- சீனா எல்லையில் பதற்றத்தைத் தணிக்க 5 அம்ச உடன்படிக்கை...

0 6995
இந்தியா -சீனா வெளியுறவு அமைச்சர்களிடையே மாஸ்கோவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எல்லையில் பதற்றத்தைத் தணிக்க 5 அம்ச உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது.

இந்தியா -சீனா வெளியுறவு அமைச்சர்களிடையே மாஸ்கோவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எல்லையில் பதற்றத்தைத் தணிக்க 5 அம்ச உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது.

மாஸ்கோவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் பங்கேற்க சென்ற மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அதே மாநாட்டில் பங்கேற்ற சீன வெளியுறவு அமைச்சர் வாங்--யீயை சந்தித்து பேச்சு நடத்தினார்.

சுமார் இரண்டு மணி நேரம் இந்தப் பேச்சுவார்த்தை நீடித்தது.

லடாக் எல்லையில் இரு நாட்டுப் படைகளும் குவிக்கப்பட்டுள்ள பதற்றம் மிக்க சூழலை தணிப்பது குறித்து இருநாட்டு அமைச்சர்களும் ஆலோசனை நடத்தினர்.

சீனாவைக் குறித்த இந்தியாவின் அரசுகொள்கையில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும், எல்லையில் பதற்றமான சூழ்நிலை நீடிப்பதை இந்தியா விரும்பவில்லை என்றும் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

முன்வரிசையில் உள்ள படைகளை இருதரப்பினரும் உடனடியாக திரும்பப் பெற்றால் பதற்ற நிலை தணியும் என்று சீன வெளியுறவு அமைச்சர் வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் மூலம் சுமுகத்தீர்வை எட்டுவதற்கு சீனா ஒப்புதல் அளித்துள்ளது.எல்லையில் துப்பாக்கிச் சூடு போன்றவை நிகழாதிருக்கவும் அத்துமீறல்களைத் தடுக்கவும் படைகளைக் குவித்திருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

இந்திய-சீன நட்புறவு தற்போது திசைதவறிவிட்டதை சீனா ஒப்புக்கொண்டுள்ளது. இருதரப்பினரும் சரியான அணுகுமுறையைக் கையாண்டால் மீண்டும் உறவுகள் சீரடையலாம் என்றும் சீன அமைச்சர் வாங்-யீ தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தையின் முடிவில் பதற்றத்தைத் தணிக்கவும் படைகளைத் திரும்பப்பெறவும் இருநாடுகளுக்கும் இடையே 5 அம்சங்கள் கொண்ட உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிக்கை வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments