4 கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு மோசடி செய்ததாக சென்னை தொழிலதிபர் மீது ஹர்பஜன்சிங் புகார்
சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் 4 கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு மோசடி செய்ததாக கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் புகார் கொடுத்துள்ளார்.
ஹர்பஜன் சிங் இதுகுறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் அலுலவகத்தில் கொடுத்த புகாரில், சென்னை உத்தண்டியைச் சேர்ந்த மகேஷ் என்ற தொழிலதிபர் 2015ஆம் ஆண்டு 4 கோடி ரூபாய் கடன் வாங்கியதாகவும், நீண்ட நாட்களுக்குப் பிறகு கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி 25 லட்ச ரூபாய்க்கான செக் கொடுத்த தாகவும் கூறியிருந்தார்.வங்கி கணக்கில் பணம் இல்லாததால் அந்த செக் பவுன்ஸ் ஆனதாகவும் ஹர்பஜன் சிங் கூறிஇருந்தார்.
இதையடுத்து சென்னை நீலாங்கரை காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ்வரையா மகேஷ் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பினார். இதனால் மகேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். அதில்,தாழம்பூரில் உள்ள சொத்தை அடமானமாக வைத்து ஹர்பஜன் சிங்கிடம், 4 கோடி ரூபாய் கடன் பெற்றதாகவும், இதுவரை 4.05 கோடி ரூபாயை கொடுத்து விட்டதாகவும் கூறியுள்ளார்.
வட்டி குறித்து பேச்சு நடந்து வரும் நிலையில் எட்டு காசோலைகளை, கொடுத்திருந்தாகவும், இதில் ஒன்றை ஹர்பஜன் வங்கியில் செலுத்தியதாகவும், பணம் கொடுக்க வேண்டாம் என, வங்கியிடம் அறிவுறுத்தி இருந்ததால், காசோலை திரும்பியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். புகாரின் மீது வழக்குப்பதிவு செய்யும் பட்சத்தில், அவர் மீண்டும் முன்ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தை நாடலாம் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
Comments