தீபாவளி சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடக்கம்

0 3521

தீபாவளி சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு தீபாவளி வருகிற நவம்பர் மாதம் 14-ந் தேதி கொண்டாடப்படுவதால் அதை ஒட்டி விடப்படும் சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன் பதிவு தொடங்கி உள்ளது.

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயிலில் நவம்பர் 12 மற்றும் 13-ந் தேதிகளில் நெல்லை செல்வதற்கான டிக்கெட்டுகள் முழுவதும் விற்றுத்தீர்ந்து, காத்திருப்போர் பட்டியலுக்கு வந்து விட்டது. மேலும் எழும்பூர்-மதுரை சிறப்பு ரெயிலில் 12-ந் தேதிக்கான டிக்கெட்டுகளும் விற்றுத்தீர்ந்துவிட்டது.

இதேபோல் தூத்துக்குடி, கோவை, மதுரை, திருச்சி, காரைக்குடி ரெயில்களிலும் தீபாவளி பண்டிகைக்கு செல்வதற்கான டிக்கெட்டுகள் வேகமாக முன்பதிவு செய்யப்படுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments