லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் மீண்டும் பயங்கர தீ விபத்து

0 3574

லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தின் எண்ணெய் மற்றும் டயர் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கடந்த மாதம் அந்த துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்த அமோனியம் நைட்ரேட் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 190 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், மீண்டும் டயர் மற்றும் ஆயில் வைக்கப்பட்டு இருந்த கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான காரணம் தெரியாத நிலையில், தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். விபத்து நடந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. தீ விபத்தில் ஏற்பட்ட உயிர்சேதம், பொருட்சேதம் பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments