மத்திய அரசின் 3 வேளாண் அவசரச்சட்டங்களுக்கு எதிராக அரியானாவில் விவசாயிகள் கலவரம்
மத்திய அரசின் 3 அவசரச் சட்டங்களை எதிர்த்து அரியானா மாநிலம் குருக்ஷேத்திரா அருகே விவசாயிகள், சந்தை தொழிலாளர்கள் மற்றும் கமிஷன் ஏஜன்டுகள் பேரணி நடத்தினர்.
குருக்ஷேத்திரா மாவட்டத்திற்குள் அவர்கள் நுழைவதை போலீசார் தடுத்ததால், அம்பாலா செல்லும் சாலையை அவர்கள் மறித்தனர். 1000 க்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டு லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முயன்ற போது பேரணியில் கலவரம் வெடித்தது.
போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதுடன், போலீஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
கடந்த ஜூன் மாதம் கொண்டுவரப்பட்ட இந்த அவசரச் சட்டங்களால், குறைந்தபட்ச விற்பனை விலை என்ற நடைமுறைக்கு அரசு முற்றுப்புள்ளி வைப்பதாக கூறி அரியானா விவசாயிகள் பேரணி நடத்தியுள்ளனர்.
Comments