நடிகை ரியா சக்கரபோர்த்தியின் கைது நகைப்புக்குரியது -ஆதிர் ரஞ்சன் சவுத்ரி
போதை மருந்து வைத்திருந்ததாக நடிகை ரியா சக்கரபோர்த்தி கைது செய்யப்பட்டிருப்பது நகைப்புக்குரிய செயல் என்று காங்கிரஸ் மக்களவை குழு தலைவரும், மேற்கு வங்க காங்கிரஸ் கமிட்டி தலைவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியுள்ளார்.
இது பற்றி பல டுவிட்டர் பதிவுகளை வெளியிட்டுள்ள அவர், ரியா சக்கரபோர்த்தி வங்காள பிராமண பெண்மணி என்றும், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியான அவரது தந்தைக்கு இந்த விவகாரத்தில் நீதி கிடைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
பீகாரில் தேர்தல் வர உள்ளநிலையில், இறந்து போன நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத்தை, ஒரு பீகாரி நடிகர் என்று கூறி, பாஜக அரசியல் ஆதாயம் தேட நினைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரியா சக்கரபோர்த்தியின் கைது மேற்கு வங்கத்தில் எந்த சலசலப்பையும் ஏற்படுத்தாத நிலையில், அதை அரசியலாக்கும் வகையில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கருத்து தெரிவித்துள்ளார்.
Departed star, Mr #SushanthSinghRajput was an Indian actor, BJP turned him into a Bihari actor, only to score electoral brownie points, #SushantSinghRajputCase
— Adhir Chowdhury (@adhirrcinc) September 9, 2020
(1/n)
Mrs Rhea Chakroborty has been indicted not for abetment of suicide nor murder nor any economic offences, she has been arrested under NDPS, ludicrous.#SushantSinghRajputCase
— Adhir Chowdhury (@adhirrcinc) September 9, 2020
(2/n)
To please the Political Masters Central agencies have played their roles, after churning the sea they have discovered drugs instead of nectar.
— Adhir Chowdhury (@adhirrcinc) September 9, 2020
Still they are groping in the dark to identify of who is the murderer?#SushantSinghRajputCase
(3/n)
Comments