திருப்பிச் செலுத்தாத கடன்களை வாராக் கடன்களாக அறிவிக்கக் கூடாது - உச்சநீதிமன்றம்
செப்டம்பர் 28 வரை திருப்பிச் செலுத்தாத கடன்களை வாராக்கடனாக அறிவிக்கக் கூடாது என வங்கிகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
வாடிக்கையாளர்கள் விரும்பினால் வங்கிக் கடன்கள், கடன் தவணைகள் திருப்பிச் செலுத்துவதை மார்ச் முதல் ஆகஸ்டு வரை 6 மாதக்காலத்துக்குத் தள்ளி வைக்க வங்கிகளை ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டது.
இந்தக் காலத்துக்கு வட்டியை முதலுடன் சேர்த்து அதற்கும் வட்டி கணக்கிட்டுத் திரும்பப் பெறப்படும் என வங்கிகள் அறிவித்தன. இந்த 6 மாதக் காலத்துக்கு வட்டியைத் தள்ளுபடி செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டன.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, திருப்பிச் செலுத்தாதவர்களின் கடன்களை வாராக்கடன்களாக வங்கிகள் அறிவிக்கக் கூடாது என்கிற உத்தரவை செப்டம்பர் 28 வரை நீட்டிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். வட்டிக்கு வட்டி கணக்கிடக் கூடாது என்கிற மனுதாரர்களின் கோரிக்கை குறித்து ரிசர்வ் வங்கி, வங்கிகள் ஆகியவற்றுடன் கலந்துபே
Comments