கொரோனா இறப்பு விகிதத்தை ஒரு சதவீதத்திற்குள் குறைக்க நடவடிக்கை - அமைச்சர் விஜயபாஸ்கர்
நாகை, கடலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கொரோனா பரிசோதனைகளை அதிகரித்துள்ளதாகவும், இன்னும் ஓரிரு நாட்களில் அந்த மாவட்டங்களில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்படும் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் நடைபாதை மேம்பால பணிகளை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்த பின் பேசிய அவர், கோவிட்-ஷீல்ட் தடுப்பு மருந்து பரிசோதனை நிலையில்தான் உள்ளது என்றார்.
அமைச்சரைத் தொடர்ந்து பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் 1.68 சதவீதமாக குறைந்துள்ள இறப்பு விகிதத்தை ஒரு சதவீதத்திற்குள் கொண்டுவர தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருவதாக கூறினார்.
Comments