சீனாவின் ஷாண்டாங் மாகாணத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு, நினைவு சின்னங்கள் அமைப்பு
சீனாவின் ஷாண்டாங் மாகாணத்தில் உள்ள தாவோ (Tao) மடத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்த 558 பேருக்கு 1 அடி உயர நினைவு சின்னங்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
அலங்கார வேலைப்பாடுகள் நிறைந்த நினைவுச் சின்னங்களில், உயிரிழந்தவரின் பெயர் மற்றும் ஊரின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கானோர் பின்பற்றும் தாவோ மதத்தில், ஒருவரை நம் நினைவை விட்டு அகற்றும் போது தான் அவருக்கு மரணம் நேர்வதாக உபதேசம் செய்யப்படுகிறது.
எனவே, இறந்தவர்களை தொடர்ந்து நினைவு கூறும் விதமாக, மடத்தில் சிறிய நினைவுச் சின்னங்களை வைத்து, அவர்கள் ஆன்மா சாந்தி அடைய நால்தோறும் பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன.
Comments