ஆக்ஸ்போர்டு தடுப்பூசி சோதனை இந்தியாவிலும் நிறுத்தி வைப்பு

0 3105
இந்தியாவிலும் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் கிளினிகல் சோதனையை நிறுத்தி வைப்பதாக அதை நடத்தும் சீரம் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளரின் உத்தரவின்படி சோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்டில் நடந்த சோதனையில் தடுப்பூசி போடப்பட்ட ஒருவருக்கு எதிர்மறையான உடல் பிரச்சனைகள் ஏற்பட்டதை அடுத்து உலக அளவில் இதன் சோதனையை நிறுத்துவதாக ஆக்ஸ்போர்டு பல்கலைகழகமும், தடுப்பூசியை தயாரிக்கும் ஆஸ்ட்ராஜெனேகா நிறுவனமும் நேற்று  முன்தினம் அறிவித்தன.

ஆனால் இந்தியாவில் எந்த பாதிப்பும் இல்லை என்பதால் சோதனை தொடரும் என சீரம் இந்தியா நேற்று அறிவித்தது. ஆனால் இந்தியாவிலும் சோதனையை நிறுத்த வேண்டும் என தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அளித்த நோட்டீசின் அடிப்படையில்  சோதனைகள் நிறுத்தி வைப்பதாக சீரம் இந்தியாஅறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments