விவசாய மின் இணைப்பை தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும் மாற்றலாம்
விவசாய மின் இணைப்புப் பெறுவது மற்றும் இடமாற்றம் செய்வதில் இருந்த நடைமுறைச் சிக்கல்களை எளிமையாக்கி, தாமதமின்றி விவசாயிகள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு மின்சார வழங்கல் மற்றும் பகிர்மான விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில், குறைந்தபட்சம் அரை ஏக்கர் நிலம் உடையோர் கிணறு மற்றும் நிலத்தின் உரிமைச் சான்றை கிராம அலுவலரிடம் பெற்று இணைத்தால் போதுமானது. விவசாய மின் இணைப்பை தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். காரணம் தெரிவிக்கத் தேவையில்லை.
நிலம் விற்கப்பட்டு கிணறு மட்டும் இருந்தாலும் மின் இணைப்பை மாற்றம் செய்ய அனுமதிக்கப்படும். 15 நாள்களுக்குள் அனுமதி கிடைக்கப்பெறாத நிலையில், விவசாய அவசர நிமித்தம் காரணமாக முறைமாற்ற திறப்பானை இயக்கிக் கொள்ளலாம். மின் இணைப்புப் பெற தயார் நிலையை தெரிவித்த 3 நாட்களுக்குள் மின் இணைப்பு கொடுக்கப்படும்.
Comments