புரட்டாசி பிரம்மோற்சவ விழாவை ஒட்டி திருப்பதியில் நாள்தோறும் 13,000 பேருக்கு அனுமதி
திருப்பதியில் 300 ரூபாய் சிறப்பு தரிசனத்தில் மேலும் மூவாயிரம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
கொரோனா பரவலை தொடர்ந்து நாள்தோறும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த 10 ஆயிரம் பக்தர்களுக்கு ஏழுமலையானை தரிசிக்க அனுமதி வழங்கப்படுகிறது. புரட்டாசி பிரம்மோற்சவம் மற்றும் விழாக்களை கருத்தில் கொண்டு 300 ரூபாய் கட்டணத்தில் சிறப்பு தரிசனத்திற்கு இன்று முதல் மேலும் மூவாயிரம் டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது. அதனை www.tirupathibalaji.ap.gov.in என்ற இணயதளம் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருமலையில் நடக்கும் ஏழுமலையான் கல்யாண உற்சவத்தில் ஆன்லைன் மூலம் பங்கு கொள்ளும் பக்தர்களுக்கு 90 நாட்களுக்குள் ஏழுமலையானை தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments