ரூ 20,050 கோடியில் பிரதமர் மீன்வளத் திட்டத்தை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி
பிரதமர் மீன்வளத் திட்டத்தை, காணொலி வாயிலாக பிரதமர் மோடி துவக்கி வைத்துள்ளார். கால்நடை விற்பனைக்கான இ-கோபாலா என்ற செயலியையும் அவர் துவக்கினார்.
அப்போது டிஜிட்டல் உரை நிகழ்த்திய அவர், மீன்வளத்துறையில் உள்ள முக்கிய பிரச்சனைகளை தீர்க்கவும், அந்த துறையில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்தவும் இந்த திட்டம் உதவும் என கூறினார்.
மீன்வளர்த்தலில் ஈடுபட்டுள்ளோரின் நலவாழ்வு, மீனவளம் தொடர்பான முக்கிய கட்டமைப்புகளை மேம்படுத்தவும் இந்த திட்டம் உதவும் என்றார் மோடி.
சுயசார்பு இந்தியாவுக்கான ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் துவக்கப்பட்டுள்ள பிரதமர் மீன்வளத் திட்டத்திற்கு 20 ஆயிரத்து 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மீன்வளத் துறைக்கான முன்மாதிரித் திட்டமான இது 5 ஆண்டுகள் செயல்படுத்தப்படும்.
இந்திய வரலாற்றில் மீனவளத் துறைக்கு ஒதுக்கப்பட்டதில் இதுவே அதிகபட்ச நிதி என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தரமான கால்நடை இனப்பெருக்கம், அவற்றுக்கான சிகிச்சைகள், விறபனை உள்ளிட்டவற்றுக்கு உதவியாக இ-கோபாலா செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
Comments