வடிவேல் பாலாஜியின் குழந்தைகள் படிப்புக்கு சிவகார்த்திகேயன் உதவி!

0 54069
வடிவேல் பாலாஜி

மாரடைப்பு காரணமாக மரணமடைந்த நடிகர் வடிவேல் பாலாஜியின் குழந்தைகள் கல்விச் செலவை தான் ஏற்றுக் கொள்வதாக நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். 

தனியார் தொலைக்காட்சியின் கலக்கப் போவது யாரு? அது இது எது, ஜோடி நம்பர்-1, கல்யாணம் முதல் காதல் வரை போன்ற பிரபல நிகழ்ச்சிகளில் நடித்து ரசிகர் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் வடிவேல் பாலாஜி. காமடி கிங் வடிவேலின் முழு தோற்றத்தை, அவரது ஸ்டைலில் டயலாக் டெலிவரி செய்து ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர்... இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடித்திருந்த கோலமாவு கோகிலா என்ற படத்திலும் வடிவேல் பாலாஜி நடித்துள்ளார். வடிவேலு பாலாஜி நடிகர் சிவகார்த்திகேயனும் நல்ல நட்பு கொண்டிருந்தார். வடிவேலு பாவாஜியின் அது இது எது நிகழ்ச்சியை நடத்திய நடிகர் சிவகார்த்திகேயனும் வடிவேல் பாலாஜியின் திடீல் இறப்பால் அதிர்ந்து போனார்.

இது தொடர்பாக கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் இயக்குநர் தாம்சனுடன் தொடர்பு கொண்டு துக்கம் விசாரித்த சிவகார்த்திகேயேன், வடிவேலு பாலாஜியின் இரு குழந்தைகளின் படிப்புச் செலவை தான் ஏற்றுக் கொள்வதாக உறுதியளித்துள்ளார். 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments