சின்னத்திரை நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார்

0 142026
சின்னத்திரை நடிகர் வடிவேல் பாலாஜி உடல் நல குறைவால் காலமானார்.

சின்னத்திரைகளில் அசத்தி வந்த காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 45.

கடந்த 15 தினங்களுக்கு முன்பு திடீர் நெஞ்சுவலி காரணமாக சேத்துப்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் மேல் சிகிச்சைக்காக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சேத்துப்பட்டு வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு உறவினர்கள் மற்றும் அப்பகுதியினர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதனிடையே, பணப்பற்றாக்குறை காரணமாகவே அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக வெளியான தகவலை உறவினர்கள் மறுத்துள்ளனர்.

வடிவேல் பாலாஜியின் சிகிச்சைக்காக 18 முதல் 20 லட்சம் வரை செலவு செய்தும் காப்பாற்ற முடியவில்லை என அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments