ராமர் கோவில் கட்டுமானத்திற்கு தேவையான பிங்க் நிற கற்களை வெட்டி எடுக்க ராஜஸ்தான் அரசு தடை
எதிர்பாராத திருப்பமாக, அயோத்தியா ராமர் கோவில் கட்டுமானப்பணிக்கு தேவைப்படும் பிங்க் நிற கற்களை வெட்டி எடுக்க ராஜஸ்தான் அரசு தடை விதித்துள்ளது.
பாரத்பூர் மாவட்டத்தில் உள்ள பான்ஷி பஹர்பூர் என்ற இடத்தில் இந்த பிங்க் நிற கற்கள் உள்ளன. ஆனால் அவற்றை வெட்டி எடுக்க சட்டபூர்வ ஒப்பந்தம் எதுவும் யாருக்கும் வழங்கப்படாத நிலையில் அங்கு கற்கள் வெட்டி எடுக்கப்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
இதை அடுத்து இந்த தடையை விதித்துள்ள பாரத்பூர் மாவட்ட ஆட்சியர், பிங்க் கற்கள் ஏற்றப்பட்ட 30 லாரிகளை போலீஸ் துணையுடன் பறிமுதல் செய்துள்ளார்.
அதே நேரம் இந்த லாரிகள் எங்கு செல்லவிருந்தன என்ற தகவல் வெளியிடப்படவில்லை. ராஜஸ்தான் அரசு விதித்துள்ள தடையால் ராமர் கோவில் கட்டுமானப் பணிகளில் தடங்கல் ஏற்படலாம் என கூறப்படுகிறது.
Comments