செஞ்சந்தன வித்தில் மார்புப் புற்றுநோய்க்கு மருந்து இருப்பதாக பீகார் ஆராய்ச்சியாளர் கண்டுபிடிப்பு
செஞ்சந்தனத்தின் வித்துக்களில் மார்பகப் புற்றநோயைக் குணப்படுத்தும் மருந்துக்கான உட்பொருள் உள்ளதை பீகாரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.
பீகாரின் கயாவில் உள்ள மகதப் பல்கலைக்கழகத்தில் உயிரித் தொழில்நுட்பத்தில் முதுகலைப் பட்டம் படித்த விவேக் அகோரி என்பவர் செய்த ஆராய்ச்சி குறித்த கட்டுரை அமெரிக்காவின் சேஜ் இதழில் வெளியாகியுள்ளது.
இதற்கு முன் செஞ்சந்தன மரத்தின் வைரப்பகுதியில் மருந்துக்கான உட்பொருளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். அது இவ்வகை மரங்களின் அழிவுக்கு வழிவகுக்கும் எனக் கூறப்பட்டது.
விவேக் அகோரி செஞ்சந்தன வித்துக்களில் இருந்து மருந்தைக் கண்டுபிடித்துள்ளதால் சந்தன மரங்களுக்கு அழிவு ஏற்படாது என்பது குறிப்பிடத் தக்கது.
செஞ்சந்தன வித்துக்களில் இருந்து எடுத்த மருந்தை எலிகளுக்கு நாள்தோறும் ஒருமுறை என 5 வாரங்களுக்குக் கொடுத்ததில் அவற்றின் மீது உண்டாக்கப்பட்ட புற்றுக்கட்டி 50 விழுக்காடு குறைந்துள்ளதாக அந்த ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.
Comments