ரபேல் இணைப்பு - கண் வைப்போருக்கு எச்சரிக்கை

0 5959
இந்திய விமானப்படையில் ரபேல் விமானங்கள் இணைக்கப்பட்டிருப்பதன் மூலம், இந்திய இறையாண்மையின் மீது கண்வைக்கும் நாடுகளுக்கு உறுதியான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

இந்திய விமானப்படையில் ரபேல் விமானங்கள் இணைக்கப்பட்டிருப்பதன் மூலம், இந்திய இறையாண்மையின் மீது கண்வைக்கும் நாடுகளுக்கு உறுதியான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

அரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலா விமானப்படைத் தளத்தில், ரபேல் விமானங்களின் இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பேசிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், நமது எல்லையில் உருவாகி உள்ள அசாதாரணமான சூழலில் ரபேல் விமானங்கள் படையில் சேர்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றார்.

எல்லையில் அசாதாரண சூழல் உருவாக்கப்பட்டது என சீனாவின் பெயரை குறிப்பிடாமல் ராஜ்நாத் சிங் பேசினார். இந்திய இறையாண்மையின் மீது கண் வைக்கும் நாடுகளுக்கு உறுதியான எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் ஃபுளோரன்ஸ் பார்லி, மேக் இன் இந்தியா திட்டத்திற்கு பங்களிக்க தாங்கள் உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்தார்.

பிரான்சின் சர்வதேச வர்த்தகத்தில் இந்திய தயாரிப்பாளர்களை அதிக அளவில் இணைத்துக் கொள்வோம் என அவர் உறுதி அளித்தார். ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக பிரான்ஸ் முழு ஆதரவு அளிக்கும் என அவர் கூறினார்.

ரபேல் இணைப்பு மூலம் இந்தியாவும் பிரான்சும் ராணுவ கூட்டுறவில் புதிய அத்தியாயத்தை துவக்கி உள்ளதாகவும் அவர் வர்ணித்தார்.

முன்னதாக பேசிய விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ். பதுவாரியா, இப்போதுள்ள சூழலை விட ரபேலை விமானப்படையில் இணைப்பதற்கான பொருத்தமான தருணம் வேறில்லை  என எல்லை பதற்றத்தை மறைமுகமாக குறிப்பிட்டார்.

ரபேல் விமானங்களின் இணைப்பு நிகழ்ச்சிக்காக இந்தியா வந்த பிரான்ஸ் ராணுவ அமைச்சர் ஃபுளோரன்ஸ் பார்லியை கவுரவித்து ராஜ்நாத் சிங் நினைவுப்பரிசு வழங்கினார். ரபேல் விமான ஸ்குவாட்ரன் கமாண்டர் ஹர்கீரத் சிங்கிடம் ரபேல் இணைப்புக்கான சான்று பத்திரத்தையும் அவர் அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments