திருமணத்துக்கு முன் உறவு... மகளுக்கு பிறந்த ஆண் குழந்தையை எரித்துக் கொன்ற பாட்டி!

0 147714
கோமதி

சங்கரன்கோவிலில், திருமணத்துக்கு முந்தைய உறவு காரணமாகத்  குழந்தை பிறந்ததால், பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையைத் பாட்டியே எரித்துக்கொலைசெய்த சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் உள்ளது கோமதி சங்கர் திரையரங்கம். கொரோனா ஊரடங்கு காரணமாகத் திரையரங்கம் மூடப்பட்டதால் இந்தப் பகுதி பெரும்பாலும் ஆள் அரவமின்றியே காணப்படும். இந்த நிலையில், பாதி எறிந்த நிலையில் 60 சதவிகித தீக்காயங்களுடன் பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது. இதைப் பார்த்துப் பதறிய அக்கம்பக்கத்தினர் காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்தில் கிடந்த ரத்தக்கறை படிந்த துணிகளைக் கைப்பற்றி, குழந்தையின் உடலை உடற்கூராய்வு நடத்த மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதையடுத்து, சந்தேகத்தின் பேரில் சங்கரன்கோவில் சங்குபுரம் 6 வது பகுதியைச் சேர்ந்த கோமதி (21), கோமதியின் தாயார் இந்திராணி மற்றும் அவரது தந்தை சண்முகவேல் ஆகியோரிடத்தில்  காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன...

21 வயதாகும் கோமதி திருமணம் ஆகாமல் காதலனுடன் கொண்ட உறவு  காரணமாக கர்ப்பமடைந்துள்ளார். இதனால், கர்ப்பத்தைக் கலைக்க முயன்றும் முடியவில்லை. இதனால், பிறந்து நான்கு நாள்களேயான குழந்தையை தன் தாய் இந்திராணியின் உதவியுடன் கோமதிசங்கர் திரையரங்க வளாகத்துக்குள் வைத்து தீ வைத்து எரித்து கொன்றுள்ளார். இது தொடர்பாகக் கோமதியின் குடும்பத்தினரைக் காவல்துறையினர் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்...  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments