வீடுவீடாகச் சென்று நெகிழிக்கழிவுகளைச் சேகரித்து மறுபயன்பாட்டுக்கு மாற்றி வருகிறார் பவுத்த துறவி
மியான்மரில் பவுத்த துறவி ஒருவர் நெகிழிக் கழிவுகளை மறுபயன்பாட்டுப் பொருட்களாக மாற்றிச் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
மியான்மர் தலைநகர் யாங்கனில் உள்ள அபாட் ஆட்டமசாரா என்னும் துறவி தனது தொண்டர்களுடன் வீடுவீடாகச் சென்று பொதுமக்களிடம் உள்ள நெகிழிக்கழிவுகளைச் சேகரிக்கிறார்.
அவற்றை 9 ஏக்கர் பரப்புள்ள தனது மடத்துக்குக் கொண்டுசென்று தரம்பிரித்துக் கழிவுகளின் தரத்துக்கேற்ப அவற்றை உணவுக் கலன்களாகவும், வெப்பத் தடுப்பான்களாகவும், கட்டுமானப் பொருட்களாகவும் பயன்படுத்தி வருகிறார்.
பழைய டயர்களின் உட்புறத்தில் நெகிழிக் கழிவுகளை வைத்து அவற்றை சிமென்ட் பூச்சால் அடைத்துத் தியான நிலையத்தின் சுவர்களைக் கட்டி எழுப்பியுள்ளார்.
நெகிழி பாட்டில்களை வரிசையாகக் கட்டித் தொங்கவிட்டு வெப்பத் தடுப்பான்களாகப் பயன்படுத்தி வருகிறார். இதன்மூலம் கழிவுகளை அப்புறப்படுத்துவதுடன் அதைப் பயனுள்ளதாக்கும் வழிகள் குறித்துப் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
Comments