ஆக்ஸ்போர்ட் தடுப்பூசி செலுத்தப்பட்ட தன்னார்வலருக்கு நரம்பியல் தொடர்பான பிரச்னை இருப்பதாக ஆஸ்ட்ராஜெனகா நிறுவனம் தகவல்

0 2521
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கொரோனா தடுப்பூசியால் பக்க விளைவுகளை சந்தித்ததாக கூறப்பட்ட தன்னர்வலருக்கு, நரம்பியல் தொடர்பான பிரச்னைகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கொரோனா தடுப்பூசியால் பக்க விளைவுகளை சந்தித்ததாக கூறப்பட்ட தன்னர்வலருக்கு, நரம்பியல் தொடர்பான பிரச்னைகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தடுப்பூசி போடப்பட்ட நபருக்கு ஏற்பட்ட எதிர்மறை விளைவுகளால், சோதனை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், நரம்பியல் பிரச்னை கொண்ட அந்த நபர் வேகமாக குணமடைந்து வருவதாகவும், இன்றைக்குள் அவர் வீடு திரும்புவார் எனவும், மருந்து தயாரிப்பு நிறுவனமான ஆஸ்ட்ராஜெனகா கூறியதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து, நிறுத்தப்பட்டுள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தின் தடுப்பூசி சோதனை அடுத்த வாரத்திற்குள்  மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments