அமெரிக்கா: பரவும் பெருநெருப்பு
அமெரிக்காவில் கலிபோர்னியாவைத் தொடர்ந்து மேலும் 2 மாநிலங்களில் காட்டுத் தீ பரவியுள்ளது. இதுவரை 47 லட்சம் ஏக்கர் வனப்பகுதி அழிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமெரிக்காவில் கலிபோர்னியாவில் கடந்த ஒருமாதமாக பற்றி எரியும் காட்டுத் தீயால் 20 லட்சம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து சாம்பலாகி உள்ளது.
இதனால் லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். மேலும் பெருந் தீ காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இருளில் தவித்து வருகின்றனர். கொளுந்து விட்டெரியும் நெருப்பு காரணமாக கலிபோர்னியாவின் பெரும்பகுதியில் வெப்பநிலை உயர்ந்துள்ளது. தீயை அணைக்கும் பணியில் நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்களும், ஹெலிகாப்டர்களும் ஈடுபட்டுள்ளன.
கலிபோர்னியாவில் பற்றிய நெருப்பு அங்கிருந்து ஒரேகான் மாகாணத்திற்கும் பரவியுள்ளது. முக்கிய நகரமான போர்ட்லேண்ட் அருகில் உள்ள லியோன்ஸின் சாண்டியம் பள்ளத்தாக்கில் நெருப்பில் சிக்கி 12 வயது சிறுவனும், அவனது பாட்டியும் உயிரிழந்தனர். இரு மாகாணங்களிலும் சேர்த்து கிட்டத்தட்ட 40 லட்சம் ஏக்கர் நிலம் நெருப்பால் வீணானதாக தேசிய தீயணைப்பு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நெருப்பின் காரணமாக 5 சிறிய நகரங்கள் முற்றிலும் அழிந்து விட்டதாகவும், ஏராளமான உயிரிழப்புகள் இருக்கலாம் என அஞ்சப்படுவதாகவும் மாகாண ஆளுநர் கேட் பிரவுன் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று வாஷிங்டன் மாநிலத்தில் 2 லட்சம் ஏக்கர் வனப்பகுதி நாசமாகிவிட்டதாகவும், சிலர் உயிரிழந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Comments