கொரேனா தடுப்பூசி போடுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மற்றும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை ஆகியவற்றில் 300 பேருக்கு கோவிஷீல்ட் தடுப்பூசி சோதனை செய்வதற்கு தன்னார்வலர்கள் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில், 18 வயதுக்கு மேற்பட்ட தன்னார்வலர்கள் 044 - 29510500 என்ற எண்ணிலோ அல்லது covidvaccinetrialdph@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதிவு செய்யப்பட்ட தன்னார்வலர்கள் மாநில சுகாதார ஆய்வுக்கூடம் அழைத்துச் செல்லப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்ட பின்னர் தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 180 நாட்களில் 5 முறை அவர்களுக்கு சோதனை நடத்தப்படும் என்றும் பொதுசுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Comments