இந்திய விமானப்படையில் 5 ரபேல் போர் விமானங்கள் இன்று இணைப்பு

0 2338
இந்திய விமானப்படையில் 5 ரபேல் போர் விமானங்கள் இன்று இணைப்பு

பிரான்ஸ் நாட்டில் இருந்து பெறப்பட்ட 5 ரபேல் போர் விமானங்கள், இந்திய விமானப்படையில்  இன்று முறைப்படி இணைக்கப்படுகின்றன. 

இந்திய விமானப்படையை வலுப்படுத்தும் விதமாக பிரான்சின் டசால்ட் நிறுவனத்துடன், 59 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 36 போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. முதற்கட்டமாக 5 ரபேல் விமானங்கள் கடந்த ஜூலை 29-ந்தேதி இந்தியா வந்து சேர்ந்தன.

அவற்றை முறைப்படி விமான விமானப்படையில் இணைக்கும் நிகழ்ச்சி, ஹரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள விமானப்படை தளத்தில் விமானப்படையின் 17வது படைப்பிரிவான கோல்டன் அரோசிஸில் ('Golden Arrows') 5 விமானங்களும் இணைக்கப்படுகின்றன.

பாரம்பரிய முறைப்படி சர்வ தர்மா பூஜையுடன் கூடிய நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், விமானப்படைத் தளபதி பதவுரியா, பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் புளோரன்ஸ் பார்லி தலைமையிலான குழுவினர் பங்கேற்கின்றனர். அதைதொடர்ந்து, இருதரப்பு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

ஏர் சுப்பீரியாரிட்டி வகையை சேர்ந்த ரபேல் விமானம் ஸ்நெக்மா எம்-88-2 டர்போஃபேன் என்ற இரட்டை எஞ்சின்களை கொண்டிருப்பதால், அனைத்து காலநிலைகளிலும் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்துவதோடு, மேம்படுத்தப்பட்ட ஆயுதங்கள், அதிக பாதுகாப்பு திறன் கொண்டதாகவும் விளங்குகிறது.

ரபேல் விமானங்கள் வானிலிருந்து தரை இலக்குகளையும், வான் இலக்குகளையும் தாக்கும் திறன் கொண்டது. பார்வைக்கு அப்பால் உள்ள இலக்குகளைக் குறிவைக்கும் திறன் கொண்ட ஏவுகணைகள் மட்டுமின்றி, மல்டி மிஷன் மற்றும் டீப் ஸ்ட்ரைக் குரூஸ் ஏவுகணைகள் போன்றவற்றை தாங்கிச் செல்லும் திறனையும் ரபேல் விமானங்கள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments