சீன அமைச்சருடன் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இன்று பேச்சுவார்த்தை

0 2109
சீன அமைச்சருடன் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இன்று பேச்சுவார்த்தை

ரஷ்யா சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், சீன வெளியுறவு அமைச்சர் வாங்-யீ யுடன் எல்லைப் பிரச்சனை குறித்து இன்று பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங்கை பேச்சு நடத்த வருமாறு சீனா கேட்டுக் கொண்டதை அடுத்து, அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சருடன் 2 மணி நேரத்திற்கும் மேலாக ராஜ்நாத்சிங் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்நிலையில், இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மாஸ்கோ சென்றுள்ளார். மாநாட்டின் இடையே சீன அமைச்சருடன் மூன்று முறை ஜெய்சங்கர் சந்திக்க வாய்ப்பு உள்ளது. இன்று மாலையில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பேச்சுவார்த்தையில் எல்லைப் பிரச்சனை குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை ஜெய்சங்கர் விளக்குவார் என்றும், கிழக்கு லடாக்கில் சீனா கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்துவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஜூன் மாதத்தில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதையடுத்து எல்லையில் பதற்றத்தைத் தணிக்க சந்தித்து இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும்பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து தற்போதைய பதற்ற நிலையைத் தணிக்க இன்றும் இரு அமைச்சர்களும் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர்.

இதனிடையே, இரு நாடுகள் இடையே எழுந்துள்ள அசாதாரண நிலையை சமரசப்படுத்த ரஷ்யா தலையிட்டு முயற்சித்து வருவதாகவும் தகவல் வெளியானது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments