ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான வினாத்தாள் தயாரிக்கும் பணியில் தகுதியான முதுநிலை ஆசிரியர்களைத் தேர்வு செய்ய அறிவுறுத்தல்

0 2025
ஆசிரியத் தகுதித் தேர்வுக்கான வினா வங்கி தயாரிக்கும் பணிக்குத் தகுதியான முதுநிலை ஆசிரியர்களைத் தேர்வு செய்து அனுப்பப் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியத் தகுதித் தேர்வுக்கான வினா வங்கி தயாரிக்கும் பணிக்குத் தகுதியான முதுநிலை ஆசிரியர்களைத் தேர்வு செய்து அனுப்பப் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக்கல்வி இயக்ககம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு வினா வங்கி தயார் செய்யும் பணிக்கு அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் தகுதியான முதுநிலை ஆசிரியர்களின் பெயர்களை அனுப்ப வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.

ஆசிரியர்கள் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்றும், அவர்களிடம் பயின்ற மாணவர்கள் 90 விழுக்காட்டுக்கு மேல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments